சிம்ரனுக்கு முத்தம் கொடுக்க 12 டேக் வாங்கிய நடிகர்… அப்புறம் நடந்தது தான் ஹைலைட்..!

தமிழ்த்திரை உலகில் முத்தம் கொடுக்கும் காட்சி பற்றி சுவாரசியமாக பேட்டி ஒன்றில் பிரபல பத்திரிகையாளர் சபீதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

‘அவள் வருவாளா’ பாடலில் சிம்ரனை சூர்யா முத்தம் கொடுக்க வேண்டும். அது 12 டேக் ஆகி விட்டது. இவரு போறாரு. வியர்த்துக் கொட்டுது.

Surya, simran
Surya, simran

அவர் ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவர். கடைசியில் 10வது டேக் போகும்போது சிம்ரனே “யோவ் வாயா”ன்னு கூப்பிட்டு முத்தம் கொடுத்து விட்டார். “யோவ் என்னய்யா ஒரு அழகான பொண்ணுக்கு முத்தம் கொடுக்க இவ்வளவு டேக் வாங்கறீயே…? நானா இருந்தா இந்த நேரத்துக்குள்ள கொடுத்திருப்பேன்” என டைரக்டர் எரிச்சல் அடைந்தார். கேமராவைச் சுற்றி இவ்ளோ பேரு நிக்காருங்கற கூச்சம் வேறு. புதுசா ஒரு நடிகையை கிஸ் அடிக்கணும்கற தயக்கம் வேறு.

அவர் பெண்களிடம் பேசிப் பழக்கம் இல்லாதவர். 12 பி பஸ்ஸில் 8000 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குப் போய் விட்டு வந்த பையன்.

ஒருமுறை மன்சூர் கிட்ட ரேப் சீன் பற்றிக் கேட்டேன். ‘எத்தனை பேரை ரேப் பண்ணியிருப்பீங்க?’ன்னு கேட்கவும்… “யோவ் என்னய்யா நிறைய பேரை ரேப் பண்ண மாதிரி கேட்குற… அதுலாம் ஒண்ணுமே இல்லையா…” என எரிச்சலுடன் சொன்னார்.

அதுக்கு சினிமாவுல ரேப் சீனுக்குத் துரத்தி துரத்தி பண்றது எல்லாம் உண்மை இல்லையா எனவும் ஏன்யா வயித்தெரிச்சலைக் கௌப்புற?ன்னு சொல்வாராம்.

GV Prakash kumar
GV Prakash kumar

ஜி.வி.பிரகாஷ்குமாரோட வாழ்க்கையில் சினிமாவில் நடிகையுடன் நெருக்கமாக நடித்துள்ளாரே… நிஜத்திலும் அப்படித்தான் இருக்குமோ என சந்தேகம் வந்ததால் தான் விவாகரத்து ஆகிவிட்டது. இது சினிமா தான். நிஜமல்ல என்று புரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையில் இப்படி நடப்பதில்லை.

சத்யராஜ் எல்லாம் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்துள்ளார். 200 படங்கள் வரை நடித்து இருக்கிறார். அவருடைய சினிமா வாழ்க்கையைப் புரிந்து கொண்டதால் தான் இன்னும் குடும்பத்துடன் அவரால் வாழ முடிகிறது.

லவ் சீன்ல கிஸ் அடிக்கும்போது தனியாக என்றால் அந்தக் கதையே வேற. ஆனால் இவ்ளோ பேரு மத்தியில் கிஸ் அடிக்கிறது புதுமுகமாக இருந்ததால் சூர்யாவுக்குப் பயம்… தயக்கம் இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1997ல் வசந்த் இயக்கத்தில் விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா, ரகுவரன் உள்பட பலர் நடித்த படம் நேருக்கு நேர். இந்தப் படத்தில் தான் சூர்யா, சிம்ரன் நடித்த அவள் வருவாளா பாடல் காட்சி இடம்பெறுகிறது. ஆனால் இந்தப் பாடலில் முத்தக்காட்சி இல்லை.

படத்தில் எங்கெங்கே பாடலில் தான் சூர்யா, சிம்ரனைப் பல இடங்களில் கிஸ் அடிக்க முயற்சிப்பார். கடைசியில் பாடலின் முடிவில் சிம்ரனே கிஸ் அடித்து விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews