சூர்யாவும் இயக்குனர் சிறுத்தை சிவாவும் இணைந்து தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்ற புதிய திட்டத்தில் இணைந்துள்ளனர்.யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது.
படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானியை ஒப்பந்தம் செய்துள்ளதாக்க தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் நடிகர் சூர்யா உடன் முதன்முறையாக ஜோடி சேர உள்ளார் திஷா. மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் சென்னை மற்றும் கோவாவில் நடைபெறவுள்ளது.சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் விரைவில் படக்குழுவினரால் வெளியிடப்படும் என முன்னதாக் தகவல் வெளியானது.
இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது, இந்த படம் பீரியட் ஆக்ஷ்ன் பாணியில் இந்த படம் உருவாகியுள்ளதாகவும், பாகுபலி ,கேஜிஎஃப் போன்று இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புஷ்பா 2க்கு மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திய அல்லு அர்ஜுன் ! எப்படியோ அந்த லிஸ்ட்ல வந்துடாரு!
சூர்யா 42′ இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு 10 மொழிகளில் வெளியாகும் மிகப்பெரிய அளவிலான திட்டமாகும். தற்போழுது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று காலை வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் தங்கள் சமூக ஊடகங்களின் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போழுது வெளியாகியுள்ளது.