’சூர்யா 40’ படத்தின் அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு!

பிரபல நடிகர் சூர்யா நடிக்கும் நாற்பதாவது திரைப்படத்தின் டைட்டில் இன்று வெளியாக இருப்பதாகவும் அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக இந்த டைட்டில் இருக்குமென்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது

அதன்படி சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டிலை பிரபல தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பில் சூர்யாவின் 40வது படத்தின் டைட்டில் எதற்கும் துணிந்தவன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவில் சூர்யாவின் அட்டகாசமான காட்சிகள் உள்ளதையும் சூர்யா ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள் என்பதும் சூர்யாவின் ரசிகர்களுக்கு மிகச்சரியான பிறந்தநாள் பரிசு இந்த வீடியோ மற்றும் டைட்டில் என்றும் கூறப்பட்டு வருகிறது 
சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார் என்பதும் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.