தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் ஆகியவற்றுக்குச் சொந்தமான நிலங்கள் குறித்த சர்வே அறிக்கையை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாதன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கறிஞர் ஜெகநாத் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ் வைத்தியநாதன், கலைமதி ஆகியோர் அடங்கிய விசாரணை குழு , 3 கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தது.
மேலும் “”இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் அனுமதியின்றி கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றவும், முறைகேடாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்யவும் வலியுறுத்தினார்.