புழல், செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் தாழ்வான பகுதிகளை கண்காணிக்க முதல்வர் உத்தரவு!

நம் தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை நிகழ்கிறது. இதனால் பல இடங்களில் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுகின்றன. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆட்சியாளர்களோடு இது குறித்து மிகுந்த ஆலோசனை மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அதன்படி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆட்சியர்களுக்கு  அறிவுறுத்தல் வழங்கினார்.

பாலம் மீது மழைநீர் சென்றால் போக்குவரத்து அனுமதிக்காமல் மாற்றுப்பாதையில் அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.மண்சுவர் வீடுகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

ஸ்டாலின்

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் மாவட்ட நிர்வாகம் தங்க வைக்க அறிவுறுத்தியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு விவரங்களை 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

நீர்த்தேக்கம், ஏரி, வடிகால்கள் சேதம் அடையாமல் இருப்பதை உரிய அலுவலர்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

சென்னை மாநகராட்சியின் அனுமதியின்றி சாலைகளில் பாலம் தோன்றுவது தவிர்க்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment