பெரிய டைரக்டர் ஆகணும்.. ஆசைப்பட்ட காமெடி நடிகர்.. முதல் படம் இயக்கி முடிப்பதற்குள் நடந்த சோகம்!

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் சுருளி மனோகர். இவர் ஒரு சில படங்களில் காமெடி நடிகராக தோன்றி பலரையும் சிரிக்க வைத்துள்ளார். அப்படி இருக்கையில், இவரது கனவு நிறைவேறுவதற்கு முன்பாக ஒரு சோகம் நடந்து அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருந்தது.

நடிகர் சுருளி மனோகர் ’இயற்கை’ திரைப்படத்தில் மந்திரவாதியாக நடித்திருப்பார். முதல் படமே அவருக்கு நல்ல அளவில் கை கொடுத்ததால் அடுத்து விஜய், த்ரிஷா நடிப்பில் தரணி இயக்கத்தில் உருவான ’கில்லி’ திரைப்படத்திலும் அமைச்சர் ராஜபாண்டியன் பிஏவாக அவர் நடித்திருப்பார். இந்த படத்திலும் சுருளி மனோகரன் காமெடி காட்சிகள் அதிக கவனம் பெற்றிருந்தது.

இதனை அடுத்து ஜீவா, நயன்தாரா நடித்த ’ஈ’ என்ற திரைப்படத்தில் அசத்தலான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பார். நடிகர் சுருளி மனோகருக்கு திருப்புமுனையை கொடுத்த படம் என்றால் அது தனுஷ், தமன்னா நடித்த ’படிக்காதவன்’ என்ற திரைப்படம் தான். இந்த படத்தில் அவர் மாரிமுத்து என்ற கேரக்டரில் பட்டையை கிளப்பி இருப்பார்.

suruli

இதனை அடுத்து விஷால் நடித்த ’தோரணை’ திரைப்படத்தில் கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்ததை அடுத்து அவர் ’காதல்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். சுருளி மனோகருக்கு மீண்டும் ஒரு நல்ல கேரக்டர் கிடைத்தது என்றால் அது விஜய் நடித்த ’சுறா’ திரைப்படத்தில் தான். இந்த படம் தோல்வி அடைந்தாலும் இன்றும் சுருளி மனோகர் காமெடி காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போது மக்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

பின்னர் மருதமலை, நானும் என் ஜமுனாவும், சமூக வலைதளம், ஒன்பது குழு சம்பத் போன்ற படங்களில் நடித்தார். மேலும் ’மீண்டும் மீண்டும் சிரிப்பு’ என்ற சன் டிவியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடரிலும் சுருள் மனோகர் நடித்துள்ளார். இது தவிர சில ரியாலிட்டி ஷோக்களிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தான் நடிகர் சுருளி மனோகர் இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவை நினைவாக்க முடிவு செய்தார். ’இயக்குனர்’ என்ற டைட்டிலில் அவரது இயக்கத்தில் ஒரு திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த படத்தில் தன்னை சுற்றி இருந்த சின்ன சின்ன நகைச்சுவை நடிகர்கள் பலருக்கும் அதில் வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்தார்.

அப்படி இருக்கையில், யாரும் எதிர்பாராத ஒரு அசம்பாவித சம்பவம் அரங்கேறியது. சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட சுருளி மனோகருக்கு நோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமானதால் அவரால் பட வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் அவரது இயக்குனர் படம் பாதியிலேயே நின்றது.

தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவை அடுத்து அவர் இயக்கிய ’இயக்குனர்’ படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. சுருளி மனோகருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். அந்த மூன்று மகள்களும் தற்போது வெவ்வேறு துறைகளில் நல்ல நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.