
பொழுதுபோக்கு
சூர்யாவின் சூரரை போற்று படத்தில் வராத சண்டைக்காட்சிகள் வீடியோ ! மாஸான சீன்ஸ்.
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சூரரை போற்றி படம் இன்று வரை பல பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்துள்ளது.இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2020ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தின் கதை அமைப்பும் மற்றும் சூர்யாவின் நடிப்பும் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுக்களை குவித்தது.
சிம்ப்ளிஃப்லி டெக்கான் நிறுவனர் ஜி கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. 68வது தேசிய விருதுகள் பட்டியலில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 5 விருதுகளை வாரிக்குவித்துள்ளது.
சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளியும் பெற்றுள்ளனர். சிறந்த பின்னணி இசைக்கான விருதை இப்படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் பெற்றுள்ளார். சிறந்த திரைக்கதைக்கான விருது இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படத்திற்கான விருதும் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து விருதுகளை ‘சூரரைப் போற்று’ திரைப்படம் பெற்றுள்ளது. இப்போது இந்த படம் சுதா கொங்காரா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக் செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் சூரரை போற்று படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது. மாறனின் காட்சி ஹிந்தி பதிப்பில் சேர்க்கப்படும், அதோடு ரீமேக் ஆகும் சூரரைப்போற்றுவில் சூர்யா காமியோவாக நடிக்க உள்ளார்.
விஜய்யின் 68வது படத்தின் இயக்குனர் யாரு தெரியுமா? மாஸான தகவல் இதோ!
