Connect with us

சூர்யாவின் 42வது மோஷன் போஸ்டர்..! யூடியூப்பில் தெறிக்க விட்ட ரசிகர்கள் !

863702 1

பொழுதுபோக்கு

சூர்யாவின் 42வது மோஷன் போஸ்டர்..! யூடியூப்பில் தெறிக்க விட்ட ரசிகர்கள் !

சூர்யாவும் இயக்குனர் சிறுத்தை சிவாவும் இணைந்து தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்ற புதிய திட்டத்தில் இணைந்துள்ளனர்.யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது.

படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானியை ஒப்பந்தம் செய்துள்ளதாக்க தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் நடிகர் சூர்யா உடன் முதன்முறையாக ஜோடி சேர உள்ளார் திஷா. மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

new project 2022 08 19t152812 415 1200x630xt 1

மேலும் படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் சென்னை மற்றும் கோவாவில் நடைபெறவுள்ளது.சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் விரைவில் படக்குழுவினரால் வெளியிடப்படும் என முன்னதாக் தகவல் வெளியானது.

இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது, இந்த படம் பீரியட் ஆக்ஷ்ன் பாணியில் இந்த படம் உருவாகியுள்ளதாகவும், பாகுபலி ,கேஜிஎஃப் போன்று இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் நந்தினிக்கு குரல் கொடுத்தது யார்? மாஸ் அப்டேட் !

சூர்யா 42′ இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு 10 மொழிகளில் வெளியாகும் மிகப்பெரிய அளவிலான திட்டமாகும். சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஹாலிவுட் பட லெவலுக்கு வெளியான இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான 24 மணிநேரத்தில் சுமார் 2.5 மில்லியன் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவிக்க, சூர்யா ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து டிரெண்டாக்கி வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top