சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 24. இப்படத்தில் முன்னணி வேடங்களில் சூர்யா, நித்யா மேனன் , சமந்தா ருத் பிரபு ஆகியோர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தினை சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.முதல் முறையாக சூர்யா 3 வேடங்களில் நடித்து வெளியான இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது.
இரட்டைவேடங்களில் சூர்யா மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து அசத்தியிருந்தார் குறிப்பாக சூர்யாவின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது,இந்த படத்தில் செட் அமைக்க 4 கோடி செலவிடப்பட்டது.
விக்ரம் குமாரின் விறுவிறுப்பான கதையில் ரகுமானின் இசையில் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு தேசிய விருதுகளையும் இந்தப் படம் பெற்றது குறிப்பிடத்தக்கது. அப்போதே, இந்தப் படத்தின் 2-ம் பாகம் தொடர்பாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு தேசிய விருதுகளையும் இந்தப் படம் பெற்றது.அப்போதே, இந்தப் படத்தின் 2-ம் பாகம் தொடர்பாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் விக்ரம் குமார் இயக்கி நாக சைதன்யா, ராசி கண்ணா நடிப்பில் உருவான ’தேங்க் யூ’ என்ற படம் வரும் 22-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் விக்ரம் குமார், ’24’ படத்துக்கான இரண்டாம் பாகக் கதையை நான்கு, ஐந்து பக்கங்கள் எழுதி வைத்துள்ளேன்.
‘AK 61’க்கு முன்பே வெளியாகும் எச்.வினோத்தின் அடுத்த படம்!