Connect with us

இந்தி இயக்குநருடன் இணையும் சூர்யா! புதிய படம் அப்டேட் !

Suriya Seated 50

பொழுதுபோக்கு

இந்தி இயக்குநருடன் இணையும் சூர்யா! புதிய படம் அப்டேட் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சூர்யா. இவர் சூரரை போற்று ஜெய்பீம் என கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் அடுத்தடுத்து நடித்து வருகிறார், சூரரைப்போற்று படத்துக்காக சூர்யாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பார் சூர்யா.அதைதொடர்ந்து பாலாவுடன் இணைந்து வணங்கான் ,வாடிவாசல் ,சிறுத்தை சிவா கூட்டணியில் ஒரு படத்தில் என பிசியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து ஞானவேல், சுதா கொங்கரா ஆகியோர் பல முன்னணி இயக்குனர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

354

இந்நிலையில் தமிழ் மொழியை தவிர பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசம் படத்தில் நடித்து வருகிறார்.சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவருடைய பிறந்தநாளுக்கு வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி எடுக்கும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி மாஸ்காட்டி வருகிறது.

newproject16 1659460937

இந்தியன் 2 வில் மீண்டும் களமிறங்கும் காஜல் அகர்வால்! தேதி அறிவிப்பு!

இந்த நிலையில் பிரபல இந்தி டைரக்டர் பரூக் கபீர் இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழ், இந்தி ஆகிய 2 மொழிகளில் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top