ராம்சரணின் RC15 படத்தில் சூர்யா! அங்கேயும் கேமியோ ரோலா?

மெகா பவர்ஸ்டார் ராம் சரண் ‘RRR’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஷங்கர் சண்முகம் இயக்கத்தில் தனது அடுத்த பெரிய படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். ராம் சரண் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் அமிர்தசரஸில் 1000 பேருடன் ராம்சரண், கியாரா நடனமாட ஒரு பாடல் காட்சி படமாகி வருகிறது. ஒரு பிரம்மாண்ட சண்டைக் காட்சியைப் படமாக்க உள்ளார்களாம். அது மட்டும் 20 நாட்கள் வரை நடைபெற உள்ள அந்த படப்பிடிப்பில் 1200 ஸ்டன்ட் நடிகர்களை நடிக்க வைக்கப் போவதாக கூறப்படுகிறது.

rc 15

இந்தப் படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.சமீபத்தில் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்தில் சைக்கோ வில்லனாக மிரட்டி இருந்தார். சிம்புவின் மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லனாகவும் , டான் படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்த மெகா படத்திலும் நடிக்கிறார் என்பது லேட்டஸ்ட் கிசுகிசுகள் பரவுகிறது.

எஸ்.ஜே. சூர்யா இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க 7 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல் பரவி வருகிறது.

RC 15 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் அரசியல் நாடகமாக இருக்கும், இதில் கியாரா அத்வானி, அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தில் ராஜு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைக்க தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

rc15 main

மேலும் இந்த பட்ஷத்தின் சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது,கார்த்தியின் விருமான் படத்தின் முன் வெளியீட்டு விழாவில் சூர்யா, ஷங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மீண்டும் தயாரிப்பாளரான தனுஷ்! கையில் உள்ள படங்களின் லிஸ்ட் இதோ!

மேலும் சூர்யா மற்றொரு பவர்ஃபுல் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில்விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடித்து படம் செமஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment