ரெண்டு வருஷ உழைப்பை வீணடித்த சூர்யா! எல்லாம் மும்பை மோகம்.. கண்ண மறைச்சிருச்சு

தமிழ் சினிமாவில் இன்று ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. அடுத்தடுத்து நல்ல கதை அம்சத்தோடு கூடிய படங்களில் நடித்து இன்று ஒரு மாபெரும் நடிகராக உயர்ந்து நிற்கிறார். சமீப காலமாக இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆரம்ப காலங்களில் இருந்த சூர்யாவிற்கும் இப்போது இருக்கும் சூர்யாவிற்கும் மிகப்பெரிய வித்தியாசமே இருந்து வருகிறது. அந்த சூர்யாவா இந்த அளவு நடித்து வருகிறார் என்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அளவுக்கு சினிமாவுக்காகவும் தன் நடிப்பிற்காகவும் கடும் உழைப்பை போட்டு வருகிறார் சூர்யா.

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அதுபோக சமூக சேவை செய்வதில் ஆர்வம் உடையவராகவும் இருக்கிறார். அகரம் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி அதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை செய்து வருகிறார்.

அதன் மூலம் பயன் பெற்ற மாணவர்கள் இன்று பெரிய பெரிய உயர் பதவிகளை வகித்து வருகிறார்கள் .இந்த அளவுக்கு ஒரு நல்ல மனிதராகவும் நல்ல நடிகராகவும் இருக்கும் சூர்யாவை பற்றி சமீப காலமாக பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. அதில் ஒன்று அவர் மும்பையில் குடும்பத்துடன் போய் செட்டில் ஆனது தான். அது மட்டுமல்லாமல் ஹிந்தியில் நடிக்க ஆர்வமும் காட்டி வருவது தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் சுதா கொங்கரா சூர்யா ஆகியோர் மறுபடியும் இணைந்து ஒரு படத்தை கொடுக்க இருக்கிறார்கள் என்ற ஒரு அறிவிப்பு வெளியானதும் சூர்யாவை சார்ந்த ரசிகர்களுக்கும் மற்ற ரசிகர்களுக்கும் ஏகப்பட்ட சந்தோஷம். அந்த படத்திற்கு புறநானூறு என்ற தலைப்பும் வைக்கப்பட்டு அது சம்பந்தமான ஒரு போஸ்டரும் வெளியானது.

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் சூரரைப் போற்று என்ற படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.அதைப்போல இந்த படமும் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என ரசிகர்கள் நம்பி இருந்தனர். அதுவும் இந்த புறநானூறு திரைப்படம் ஒரு வரலாற்றுப் பின்னணியில் அமையும் திரைப்படமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது .

அதாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் அமையும் என கூறப்பட்டு வந்தது. அதில் சூர்யா நடிப்பது இந்த படத்திற்கு கூடுதல் பலம் என்று அனைவரும் பேசி வந்தார்கள். இதற்காக சுதா கொங்கரா இரண்டு வருஷமாக கதைகளை எழுதி ஒரு முழு ஸ்கிரிப்ட்டை தயாராக வைத்திருக்க திடீரென சூர்யாவின் மும்பை மோகம் இந்த படத்தில் நடிக்க மறுத்திருக்கிறது.

கதையைக் கேட்டு சூர்யாவுக்கு இந்த கதை வேண்டாம். வேற கதை வேண்டுமென்றால் எடுப்போம் என சொல்ல இருவருக்கும் இடையே இப்போது விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் இந்த படம் டிராப் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...