சூர்யா 42 படத்திற்கு வந்த சோதனை காலமா இது? எச்சரிக்கை கொடுத்த படக்குழு!

சூர்யா தற்போழுது இயக்குனர் சிறுத்தை சிவாவும் இணைந்து தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்ற புதிய திட்டத்தில் நடிக்கியுள்ளார் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரிக்கும் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது.

படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானியை நடிகையுள்ளார்.மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.மேலும் படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

suriyaa42

சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் படக்குழுவினரால் வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது.சூர்யா 42′ இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு 10 மொழிகளில் வெளியாகும் மிகப்பெரிய அளவிலான திட்டமாகும்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வைரலானது, படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களைப் பார்த்தாள் இது நிகழ்காலப் படமாக இருக்குமோ என பலர் சந்தேகித்து வருகின்றனர். இது படக்குழுவினருக்கு தேவையற்ற குழப்பத்தை உருவாக்கியது.

suriyaa 42

suriyaa 42

இந்நிலையில் படக்குழுவினர் சார்பில் “அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்” விடுக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த “சூர்யா 42 படத்தின் சில வீடியோக்கள் புகைப்படங்கள் பகிரப்பட்டதை நாங்கள் அறிந்தோம். இது தவறான முறையாகும் படத்தை தியேட்டர் பார்ப்பதற்காகவே கடினமாக உழைப்பதாகவும் கூறினார்.

மேலும் தொடர்ந்து இப்படி நடந்தால் உங்கள் மீது ‘பதிப்புரிமை மீறல்’ சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்,” என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment