பிரகாஷ்ராஜ்க்கு அறுவை சிகிச்சை: மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வைரல்!

bd4b9aea35611cbd1be0b1d658262e50

நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் கீழே விழுந்து காயம் அடைந்த நிலையில் அவருக்கு லேசான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழ் தெலுங்கு உள்பட பல மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் தனது வீட்டில் எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்ததால் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் அவருக்கு தோள்பட்டையில் லேசான அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக அவர் ஹைதராபாத் சென்றதாகவும் தெரிந்தது

இந்த நிலையில் தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டதாகவும் அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது அண்ணாத்த, எனிமி, கேஜிஎப் 2, பொன்னியின் செல்வன் உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.