பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட்டுகளாக ஆரி, பாலாஜி, ரியோ, சோம், ரம்யா ஆகிய 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட்டுகளாக ஆரி, பாலாஜி, ரியோ, சோம், ரம்யா ஆகிய 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் பழைய ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து சென்றனர். வந்து சென்ற அனைவருக்குமே ஆரியின் குணமும் அவருடைய ஆட்டமும் மக்கள் மத்தியில் அவருக்கு உள்ள வரவேற்பும் தெளிவாக தெரிந்துவிட்டது.
வழக்கம் போல் கிடைத்த சொற்ப நேரத்திலும் பட்டையை கிளப்பினார். ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஆரிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வரும் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதும் ஆரியை கட்டியணைத்து அன்பபை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றது குறித்து ஷேர் செய்துள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி. அதாவது, நேரம் மற்றும் இடம் குறைவாக இருந்தது. ஒவ்வொரு கணத்தையும் ரசித்தேன். எனக்கும் ஆரி ப்ரோவுக்கும் இடையிலான மிகவும் மனம் நிறைந்த உரையாடல் இருந்தது. ஆனால் உங்களின் பல கோரிக்கைகளை நேரில் நிறைவேற்றியிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
However less was the time and space, it was time and space. Enjoyed every moment. Most hearty conversation between me and Aari bro never saw light. But fulfilled many of your requests in person.#AariArjunan #biggbossthatha
— Suresh Chakravarthy (@susrisu) January 16, 2021