தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை சின்ன தல என்று அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா புகழ்ந்து தள்ளி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி உள்ளாக்கி உள்ளது
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் ரூபாய் 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது டிஎன்பிஎல் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதை கமெண்ட்ரி செய்து கொண்டிருந்த சின்ன தல சுரேஷ் ரெய்னா விஜய்யின் மாஸ்டர் படத்தை தான் சமீபத்தில் பார்த்ததாகவும் விஜய் சூப்பர் ஆக நடித்து இருந்தார் என்றும் என் மகனோடு சேர்ந்து இந்த படத்தை கண்டு களித்தேன் என்றும் தெரிவித்தார்
இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தை சின்னத்தல பாராட்டிய தகவலை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது