இடைத்தேர்தலில் கமலின் ஆதரவு கண்டிப்பாக காங்கிரஸுக்கு இருக்கும்!!

சில நாட்களுக்கு முன்பு ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார். இதனால் அந்த பகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் கமல்ஹாசன் கடை சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆன ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.

இதனால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கமல் இருப்பார் என்றும் தெரிந்தது. மேலும் தற்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியும் அளித்தார். இந்த பேட்டியின் இறுதியில் தமிழ்நாட்டு முன்னேற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்று கூறியிருந்தது காங்கிரசுக்கு ஆதரவளிப்பது போல் தெரிந்திருந்தது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் கமலிடம் ஆதரவு கூறியுள்ளதாக இவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமலிடம் ஆதரவு கூறினோம் என்று பேட்டி அளித்துள்ளார்.

எனவே கமல் கண்டிப்பாக ஆதரவு கொடுப்பார் என நான் நம்புகிறேன் என்றும் அவர் கூறினார். கட்சியினருடன் ஆலோசித்த பின் தனது முடிவை கூறுவதாக கமல் என்னிடம் கூறினார் என்றும் இளங்கோவன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் பேட்டி அளித்துள்ளார். கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், எம் எல் ஏ மௌலானா உள்ளிட்ட நிர்வாகிகள் கமலுடன் சந்திப்பு நடத்தினர்.

அதிமுக இரண்டாக உடையவில்லை நான்காக உடைந்து இருக்கிறது என்றும் இவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார். இடைத்தேர்தலில் கமல் ஆதரவளித்தால் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தொடக்கமாக இது அமையும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பதினோராயிரம் வாக்குகள் பெற்றார் என்றும் இளங்கோவன் கூறினார். எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளவும் கமலை சந்தித்து நான் அழைப்பு விடுத்தேன் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.