Connect with us

திருமண பலாத்கார வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

sexual harassment

செய்திகள்

திருமண பலாத்கார வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

மனைவியின் அனுமதியின்றி கணவர் பாலியல் பலாத்காரம் செய்தால் குற்றம் என அறிவிக்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் உயர் நீதிமன்ற நீதிபதி ராஜீவ் ஷக்தேர் கடந்த சில மாதங்களுக்கு முன் மனைவியை கட்டாயப்படுத்தி கணவன் உறவு கொள்வவது குற்றம் என தீர்ப்பு வழங்கி இருந்தார்.

ஆனால் நீதிபதி ஹரி ஷங்கர் இத்தகைய கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். குறிப்பாக சட்டப்படி 2 முதல் பிரிவு 375 வரையிலான அரசியலமைப்பின் படி, இது சட்டவிரோதமானது அல்ல என தனது தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் விசாரணை அமர்வானது நீதிபதிகன் முன் இன்று வந்தது. அப்போது மனைவியின் அனுமதியின்றி கணவர் பாலியல் பலாத்காரம் செய்தால் குற்றமாக கோரும் அனைத்து மனுக்களையும் இணைத்து வருகின்ற 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளதாக கூறினார்.

மேலும், இந்த வழக்கு குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை வேண்டும் என கோரி உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top