நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

முதுநிலை மருத்துவ படிப்பு நீட் தேர்வு ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இளங்கலை மருத்துவ இடங்களுக்கு ஜூலை 17ம் தேதியும், முதுகலை மருத்துவ இடங்களுக்கு மே 21 -ம் தேதியும் நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு துறை கவுன்சிலிங் தெரிவித்து இருந்தது.

இதனிடையே கடந்த ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு கலந்தாய்வு தற்போது வரையில் நிறைவடையவில்லை என்றும் இந்த சூழலில் நடப்பாண்டில் நீட் தேர்வு நடத்துவது முறையாக இருக்காது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் அமர்வு இன்று வந்த நிலையில் தேர்வை தள்ளி வைத்தால் பல்வேறு பின் விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்ற காரணத்தால் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது முக்கியமான கடமை என்றும் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment