Connect with us

ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

online rummy

தமிழகம்

ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல்  தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு குறித்து  பதில் அளிக்க வேண்டும் என கூறியுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டை தடை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து ஜங்கிளி கேம்ஸ், ப்ளே கேம்ஸ் ஆகிய டிஜிட்டல் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

அப்போது தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில் மனு மீதான விசாரணை அமர்வு அனிருத் போஸ் மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் முன் அமர்வுக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இத்தகைய விளையாட்டால் பலபேர் தற்கொலை செய்துகொண்டதாக தன் வாதங்களை முன்வைத்தார்.

அப்போது பேசிய நீதிபதி ஜங்கிளி கேம்ஸ், ப்ளே கேம்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் பத்து வாரங்களுக்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top