எதுவும் சரியாக செய்யவில்லை; லக்கிம்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் விவசாயிகள் எங்கேயாவது தற்கொலை செய்து கொண்டே வருகின்றனர், அவர்களுக்கு எதிராக அநீதிகளும் அதிகமாக நடைபெற்று வருகிறது.

லக்கிம்பூர்

 

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் அணி திரண்டு நடந்து சென்றனர். அவர்கள் மீது வரிசையாக கார் ஏறியதில் பரிதாபமாக விவசாயிகள் உயிரிழந்தனர்.

இது குறித்து உச்சநீதிமன்றம் உத்தரபிரதேச மாநிலத்தை பல்வேறு கேள்விகளைக் கேட்டது. இந்த நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தின் போலீஸ் விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அதன்படி லக்கிம்பூர் விவகாரம் தொடர்பான விசாரணையை உத்திரப்பிரதேசம் காவல்துறை தாமதம் ஏற்படுகிறது என்றும் உச்சநீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது. உத்தரபிரதேச அரசு இதுவரை எடுத்துள்ள விசாரணை நிலவர அறிக்கையை எதுவும் இல்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் அலைபேசியை கூட இதுவரை போலீசார் பறிமுதல் செய்ததாக தெரியவில்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். லக்கிம்பூர் வழக்கில் தடவியல் சோதனை முடிவுகள் கூட இன்னும் வெளிவராமல் இருக்கிறது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

லக்கிம்பூர் வழக்கில் போலீஸ் விசாரணையை ஏன் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் நடத்தக் கூடாது? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நீதிபதிகளின் கேள்வி குறிப்பு வெள்ளிக்கிழமை பதிலளிப்பதாக உச்சநீதிமன்றத்தில் உத்தரபிரதேச அரசு பதில் அளித்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment