காங்கிரசுக்கு ஆதரவா? ஆலோசத்து முடிவு; என்னதான் சொன்னார் கமல்?

தமிழக மக்களிடையே உலகநாயகன் என்ற அந்தஸ்தை பெற்று காணப்படுபவர் தான் நடிகை கமல்ஹாசன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் மட்டுமின்றி இவரது கட்சியான மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அனைவருமே படுதோல்வி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் தான் இவர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இவ்வாறு உள்ள நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு குறித்தான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

மேலும் நடிகர் கமலஹாசன் அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். ஆயினும் அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிகிறது.

ஏனென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை செய்தார். இந்த நிலையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு பொது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

நன்மை, தீமைகள் உள்ளிட்டவை குறித்து கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தமிழகத்தின் முன்னேற்ற மட்டுமே எனக்கு தேவை வேறு எந்த தேவையும் எனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.