Connect with us

பாலியல் தொழில் செய்ய சொல்லி மிரட்டல்!! துணை நடிகை பரபரப்பு புகார்…

Capture 26

பொழுதுபோக்கு

பாலியல் தொழில் செய்ய சொல்லி மிரட்டல்!! துணை நடிகை பரபரப்பு புகார்…

தன்னை பாலியல் தொழிலுக்கு அழைத்து சிலர் மிரட்டல் விடுப்பதாக துணை நடிகை ஒருவர் சென்னை காவல் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

சினிமா துறையை பொறுத்த வரையில் நடிகைகளை பாலியல் தொழிலுக்கு அழைப்பது போன்ற விவகாரங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. இதனால் பல நடிகர்கள், இயக்குனர்கள் சிறைக்கு செல்வது வாடிக்கையான ஒன்றாக அமைந்துள்ளது.

அந்த வகையில்  சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 20 வயதான துணைநடிகை நிக்கிதா பாக்கியராஜ் இயக்கிய உலக சாதனை, 369, அகத்தியன் குரும்படம் மற்றும் சில விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது தோழி மூலம் அறிமுகமான சினேகா, பிரகாஷ்,ரியா, நந்தினி ஆகிய 4 பேரும் தன்னை பாலியல் தொழிலுக்கு அழைத்து மிரட்டம் விடுப்பதாக புகாரில் கூறியுள்ளார்..

மேலும், தனகக்கு உரிய பாதுகாப்பு வழங்கி தன்னை மிரட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top