என்னைத் தொட முடியாததால் ஆதரவாளர்களை கைது செய்கின்றனர்: சீமான்!

தர்மபுரி மாவட்டம் அரூரில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நாற்காலி வீச்சு நடைபெற்றது. அதன்படி தர்மபுரி மாவட்டம் அரூரில் கனிமவள கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாம் தமிழர் கட்சியின் மேடைப் பேச்சாளர் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று திமுக நிர்வாகி ஒருவர் மேடைக்கு வந்து அவரை தாக்க முயன்றார்.

அதன் பின்னர் அந்தப் பகுதியில் கலவரமான சூழல் நடந்தது. கீழே நின்று கொண்டிருந்த மற்றொரு திமுக உறுப்பினர் நாற்காலியை கொண்டு மேடையில் உள்ளார் மீது வீசினார். இது குறித்து நாம் தமிழர் கட்சியினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி என்னை தொட முடியாததால் ஆதரவாளர்கள் கைதுசெய்துள்ளதாக சீமான் கூறியுள்ளார். அதன்படி என்னை தொட முடியவில்லை என்பதால் என்னுடன் இருப்பவர்களை கைது செய்கின்றனர் என்று சீமான் கூறினார். நான் கூட்டத்தில் பேசியபோது காலணி காட்டியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பேசுகின்றனர் என்றும் சீமான் பேட்டி அளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment