சிங்கிள்ஸ்க்கு ஆதரவு! ஒருவேளை அவரும் சிங்கிளா இருப்பாரோ?

0c1b1ecf858ba2eaf3d89c917e88428e-2

தனது  நடிப்பாலும் தனது அழகாலும் மக்களிடையே நல்லதொரு இடத்தைப் பிடித்தவர் நடிகை வர்ஷா .நடிகை வர்ஷா பொல்லம்மா தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் மேலும் மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என மூன்று முகங்களை கொண்ட நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாக்கிய வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.7dc8a61eb20c48e104b09582f79cef6c-1

வெற்றிவேல்  திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரத்தை கொண்டே இந்தப் படம் நகர்வதாக கூறப்படுகிறது. மேலும் அதன் பின்னர் இவர் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற 96 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரின் நடிப்புக்கு மிகப்பெரிய பரிசாக வெற்றி கிடைத்தது பிகில் திரைப்படம். மேலும் இவர் இளைய தளபதி நடிப்பில் வெளியாகிய பிகில் திரைப்படத்தில் நல்லதொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் அக்கதாபாத்திரம் மக்களை கவர்ந்தது என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாக உள்ளது.

இந்நிலையில் அவர் சில தினங்களாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது ரசிகர்களுக்கு சில இன்பமான தகவல்களை அளித்து வருகிறார். மேலும் அதனை காணும் அவர் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதன்படி அவர் இன்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் சிங்கிள்ஸ் க்கு ஆதரவாக போஸ்டர் ஒன்றை போஸ்ட் செய்துள்ளார், அதனால் அந்த போஸ்டர் அவர் ரசிகர்கள் மற்றும் சிங்கிள்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அந்த போட்டோவிற்கு லைக் வந்த வண்ணமாக உள்ளது. இதனால் அந்த போட்டோவில் மூலம் நடிகை வர்ஷா பொல்லம்மா ஒருவேளை சிங்கிளாக இருப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.