விஜய்பட இயக்குனருக்கு முன்னுரிமை அளிக்கும் சூப்பர் ஸ்டார்…. டைம் ஒர்க் அவுட் ஆகிடுச்சுபோல….!

சில நாட்களாகவே அண்ணாத்த படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி தான் எழுந்து வருகிறது. ஏனெனில் சமீபகாலமாக ரஜினி நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் சரியான வரவேற்பை பெறாததால் எப்படியாவது ஒரு நல்ல படத்தில் நடிக்க வேண்டும் என்ற முடிவில் ரஜினி உள்ளாராம்.

ரஜினிகாந்த்

அதனால் பல இளம் இயக்குனர்களை அழைத்து ரஜினி கதை கேட்டதாகவும், தனக்கு இந்த மாதிரி கதை தான் வேண்டும் என குறிப்பிட்டு சொன்னதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த செய்தியில் இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி, வெங்கட் பிரபு மற்றும் நெல்சன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது.

இந்நிலையில் தற்போது ரஜினி அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வெற்றி பெற்றது. அதிலும் டாக்டர் படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.

இதுதவிர தற்போது நடிகர் விஜய்யை வைத்து நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பே பலரும் படத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இதனால் தற்போது ரஜினி இயக்குனர் நெல்சனுக்கு தான் அதிக முன்னுரிமை அளித்து வருகிறாராம்.

முன்னதாக வெளியான அண்ணாத்த படத்தின் கலவையான விமர்சனம் மற்றும் வசூல் தோல்வியால் அடுத்த படத்தை தேர்வு செய்வதில் அதிக அக்கறை காட்டி வரும் ரஜினியிடம் பல இயக்குனர்கள் கதை சொல்லி இருந்தாலும், ரஜினி என்னவோ நெல்சனுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. எனவே ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment