ஃபிளாஷ்பேக் 2021: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது….

ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருது தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டது.

ரஜினிகாந்த்

 

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெறவில்லை. எனவே 2021ஆம் ஆண்டு விருது விழா நடைபெற்றது. அதன்படி அக்டோபர் 25 ஆம் தேதி நடந்த விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

67வது திரைப்பட விருது

ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக மத்திய அரசால் விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த 67வது தேசிய திரைப்பட விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்பட்டது.

45 ஆண்டுகளுக்கும் மேலான அவரது திரைத்துறை பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் மட்டுமல்ல இந்த ஆண்டில் ஏராளமான தமிழ் நடிகர்கள் தேசிய விருதை தட்டி சென்றனர்.

அந்த வகையில் அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா எனும் திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment