தட்டித் தூக்கிய காலா.. லிஸ்ட்டில் இடம்பெற்ற ஒரே தமிழ்ப்படம்.. இந்த நூற்றாண்டின் சிறந்த படமாக தேர்வு

சூப்பர் ஸ்டார் ரஜினி என்றாலே அது பிரம்மாண்டம், பாக்ஸ் ஆபிஸ், மாஸ் என சின்னக் குழந்தையும் சொல்லும். நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருந்தாலும் அது ரஜினி படம் என்ற பெயருக்காகவே ஹிட் அடிக்கும். அந்த வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் மெட்ராஸ் படத்தினை அடுத்து சூப்பர் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய இருபடங்களை தொடர்ச்சியாக இயக்கினார்.

இந்த இரண்டு படங்களுமே பா.ரஞ்சித் ஸ்டைலில் எடுக்கப்பட்டாலும் அது சூப்பர் ஸ்டார் படம் என்பதால் அந்த மாஸ் குறையாமல் பார்த்துக் கொண்டார். இவ்விரு படங்களுமே வசூலில் சக்கைப் போடு போட்டது. மேலும் பா.ரஞ்சித்தும் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இணைந்தார். தற்போது தங்கலான் படத்தினை இயக்கி வருகிறார்.

25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையப் போகும் பிரபுதேவா-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி..

இந்நிலையில் கடந்த 2018-ல் வெளியான காலா திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இங்கிலாந்திலிருந்து வெளியாகும் Sight and Sound என்ற மாத இதழானது இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் காலா திரைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பட்டியலில் இடம்பெற்ற ஒரே தமிழ்ப்படமும் காலா மட்டுமே. இந்த மாத இதழானது British Film Institute-ன் மற்றோர் அங்கமாக விளங்குகிறது.

காலா திரைப்படம் மும்பை தாராவி மக்களின் வாழ்க்கை முறையை படம்பிடித்துக் காட்டியது. தாராவி பகுதியை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதியின் சூழ்ச்சியை தாராவி மக்களின் தலைவனான காலா என்ற கரிகாலன் எப்படி முறியடித்து தாராவி நிலத்தைக் காப்பாற்றுகிறார் என்பதே கதை. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அட்டகத்தி, மெட்ராஸ், காலா என தனது படங்களில் தொடர்ச்சியாகக் கூறிவருகிறார் இயக்குநர் பா.ரஞ்சித். அந்த வகையில் காலா படத்திற்கு இப்படி ஓர் கௌரவம் கிடைத்துள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் Old Baby, History of Violence போன்ற படங்களும் இடம்பெற்றுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews