ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் மாஸ் அப்டேட்!! வேற லெவலா இருக்கே!!

பீஸ்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும்  படம் ஜெயிலர். ரஜினிகாந்தின் 169-வது படமாக இப்படம் அமைந்துள்ளது.

இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.

rajinii ti 1 1

தற்போது ஜெயிலர் படப்பிடிப்பு ராயப்பேட்டையில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் காவல் நிலைய செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், படையப்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment