Connect with us

சூப்பர் ஸ்டார் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது!

News

சூப்பர் ஸ்டார் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது!

b1294238d03ab54ef4e998df4c0f373b

சூப்பர் ஸ்டார் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் இது குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக மர்ம நபர் ஒருவர் மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார். இதனையடுத்து காவல்துறையினர் அமிதாப்பச்சன் வீட்டில் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை என்பதை அடுத்து புரளி என்பது உறுதி செய்யப்பட்டது

இதனை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் இன்னொருவருடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

அமிதாப்பச்சன் வீட்டில் மட்டுமின்றி சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்பட மூன்று ரயில் நிலையங்களிலும் இதே நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மேலும் அவர் எந்தெந்த பகுதியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top