Entertainment
பணியாற்றியதிலே மிகவும் பணிவான சூப்பர் ஸ்டார் அஜித்… வலிமை பட வில்லன்…
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இம்மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் வலிமை படத்தில் வில்லனாக நடிக்கும் தெலுங்கு பட நடிகர் கார்த்திகேயா தற்போது ஒரு பேட்டியில் தல அஜித் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “அஜித் குறித்து இந்த நேர்காணல் முழுக்க பேசுவதற்கு உள்ளது, நான் பணியாற்றியதிலே மிகவும் பணிவான சூப்பர் ஸ்டார் அஜித் தான். அவர் அவ்வளவு பெரிய நடிகர் என்பதை எந்த விதத்திலும் காட்டிக்கொள்ள மாட்டார்” என பேசியுள்ளார்.
