ஒமைக்ரானின் எதிரொலி: தடுப்பூசி பதுக்கல்! ஏழை நாடுகளுக்கு துரோகம் செய்யும் வல்லரசு நாடுகள்!!

சில வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் தோன்றி தற்போது உலகில் அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது ஒமைக்ரான். இந்த ஒமைக்ரான் வைரஸ் அதிக வீரியம் உள்ளதாக பரவிக்கொண்டு வருகிறது.

உலக சுகாதார துறை அமைப்பு

இந்த நிலையில் ஒவ்வொரு நாட்டு அரசும் இதற்கு எதிராக பல்வேறு முறைகளில் போராடி வருகிறது. உலக சுகாதார அமைப்பு சில அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளது. அதன்படி ஒமைக்ரான் தீவிர பரவலின் எதிரொலியாக காணப்படுகிறது.

அதன்படி உருமாறிய ஒமைக்ரான் வேகம் எடுத்துள்ளது. அதற்கான  மருத்துவ ரீதியான தாக்கங்களையோ அல்லது தடுப்பூசிகளின் தாக்கங்களையோ நாங்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஆனால் நிச்சயமாக அது வெல்ல முடியாத ஒன்று இல்லை என்றும் கூறியுள்ளது. வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் வைரஸ் தடுப்பு, தடுப்பூசி வினியோகத்தில் நாம் செய்யும் நடவடிக்கைகள் ஒமைக்ரானை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும் என்று கூறியுள்ளது.

இதில் வேதனை அளிக்கும் தகவல் என்னவென்றால் பல நாடுகளில் தடுப்பூசிகள் பதுக்கி வைக்கப்படுவதாக கூறியுள்ளது. அதன்படி வல்லரசு நாடுகள் தங்கள் நாடுகளில் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திய பின்னரும் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த முயற்சிப்பதால் தடுப்பூசி தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

இவ்வாறு தடுப்பூசி பதுக்கி வைக்கப்பட்டால் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்காது என்றும் கூறியுள்ளது. கொரோனா ஒழிக்க தடுப்பூசியால் மட்டுமே முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment