Connect with us

டூத் பிரஷ்ஷால் சிக்கிய சூப்பர் மார்க்கெட் ஊழியர்..!! பல லட்சம் ரூபாய் மோசடி;

supermarket

Tamil Nadu

டூத் பிரஷ்ஷால் சிக்கிய சூப்பர் மார்க்கெட் ஊழியர்..!! பல லட்சம் ரூபாய் மோசடி;

தற்போது தமிழகத்தில் பல இடங்களில் மோசடி செயல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதுவும் குறிப்பாக மோசடி செயலில் ஈடுபடுபவர்கள் அந்த கடையில் அல்லது நிறுவனத்தில் நம்பிக்கை வாய்ந்த ஊழியர்களாக காணப்படுகின்றனர்.

அந்த வகையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றில் அங்கு பணியாற்றிய ஊழியர் டூத் பிரஷால் சிக்கியது தெரியவந்துள்ளது. மேலும் அவர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் 40 ஆண்டுகளாக மாயாராம் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. சூப்பர் மார்க்கெட் உரிமையாளரான சுரேஷ் என்பவர் கடந்த ஆண்டு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

ராஜேஷ் என்ற தனது ஊழியர் தவறான கணக்கு காட்டி இலட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தார். வழக்கமாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கம்ப்யூட்டர் பில்கள் வழங்கப்படுவது வழக்கம்.

வாடிக்கையாளர் பில்களை கணினியில் சேவ் செய்த பிறகு வழங்காமல் அப்படியே ராஜேஷ் பிரிண்ட் கொடுத்திருக்கிறான். வாடிக்கையாளர்கள் அங்கிருந்து சென்றதும் கணினியில் உள்ள பில்லில் மாற்றம் செய்து தொகையை சரி பாதியாக குறைத்து மோசடி செயலில் ஈடுபட்டுள்ளார்.

பாதி தொகையை பாக்கெட்டில் போட்டுக் கொள்வதை ராஜேஷ் வாடிக்கையாக வைத்திருந்தான். தாம் வாங்கிய டூத் பிரஷ்சை மாற்றுவதற்காக வந்தபோது அந்த சமயத்தில் ராஜேஷ் கல்லாவில் இல்லாததால் சுரேஷிடம் சிக்க நேரிட்டுள்ளது.

அந்த பில்லில் 5000 ரூபாய் வாங்கிய சுரேஷ் கம்ப்யூட்டரில் கப்பலில் 2,500 ரூபாய்க்கு மட்டுமே பொருள்கள் வாங்கியது போல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் கடை உரிமையாளர்.

சுரேஷ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து நிலையில்தான் 5 லட்சம் மட்டும் தவறாக கணக்கு காட்டி திருடியதாக ராஜேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில் சுமார் 45 லட்சம் வரையில் சுருட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நல்லவன் போல் பணத்தை திருப்பித் தருவதாக கூறி போலீசிடம் எழுதிக் கொடுத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். ராஜேஷ் சொந்த ஊரில் வீடு, கார் என சொகுசாக வலம் வந்த ராஜேஷ் தன்னை நம்பி ஒப்படைத்த வரை ஏமாற்றியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top