தமிழ்சினிமாவில் யதார்த்தமா கெத்து காட்டிய வில்லன்கள் – ஒரு பார்வை

சினிமாவில் ஹீரோவை விட வில்லன்களுக்குத் தான் நடிக்க பெரிய ஸ்கோப் இருக்கும். ரொம்பவும் வித்தியாசமாக நடிக்கலாம். அந்த வகையில் சில வில்லன்கள் தமிழ்சினிமாவில்  வந்து இருக்கிறார்கள்.

இவர்களுக்கு மிகப்பெரிய உடல் அமைப்பு தேவையில்லை. ரத்தம் தெறிக்க அடிதடி சண்டை போடணும்னு அவசியமில்லை. காது கிழிய கத்த மாட்டார்கள். ஆனால் ஹீரோவை அலற விடுவார்கள். அப்படிப்பட்ட வில்லன்கள் யார் யார் என பார்ப்போம்.

இரும்புத்திரை

இந்தப் படத்தில் அர்ஜூன் வைட் டெவிலாக வந்து கலக்குவார். பேங்க் ஹாக்கர்ஸ் ஆக வந்து நம்மை அசராமல் திணறடிப்பார். அவ்ளோ எபெக்ட இந்தப் படத்திற்காகக் கொடுத்திருப்பார். பேங்க்ல லோன்னு சொல்லி ஒருத்தன் போன் பண்ணினா போதும். உங்க அக்கௌண்ட் நம்பர்ல இருந்து ஏடிஎம் பின், ஓடிபி, ஆதார் வரைக்கும் எல்லாத்தையும் கொடுத்துறீங்க.

எல்லா ஆப்ஸையும் டவுன்லோடு பண்ணும்போது அக்ரி அக்ரின்னு கொடுத்து முட்டாளாயிடுறீங்க. உங்க போன்ல இருக்குற கேமரா எனன மாதிரி ஹாக்கர்ஸ்க்கு மூணாவது கண் அப்படின்னு அர்ஜூன் டயலாக் பேசும்போது தான் அவரோட வில்லத்தனம் தெரிகிறது.

தெறி

Mahendran
Mahendran

இந்தப்படத்துல மகேந்திரன் வானமாமலைங்கற கேரக்டர்ல வாராரு. கம்பீரமாக கூலிங் கிளாஸ் சகிதம் ஒயிட் அண்ட் ஒயிட்ல நடந்து வர்ற ஸ்டைலே தனி தான்.

ஒரு பொண்ணோட கேஸ் 10 மணி நேரத்துல அவ யாரு? யார் அவள ரேப் பண்ணுனாங்கன்னு கண்டுபுடிச்ச நீ… அடுத்த 10 மணி நேரம் நான் உனக்கு டைம் தாரேன். என் மகன கொன்னது யாருனு எனக்கு தெரிஞ்சாகணும். அவனுக்கு சாவுக்கு மேல பெரிய தண்டனையை நான் கொடுத்தாகணும்… அப்படின்னு மகேந்திரன் பேசுவார். தியேட்டரே அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கும்.

தனி ஒருவன்

Aravindasamy
Aravindasamy

இந்தப் படத்துல அரவிந்தசாமி,  சித்தார்த் அபிமன்யுவாக நடித்து இருப்பார். ரொம்பவே வித்தியாசமான ஸ்மார்ட்டான வில்லனாக வந்து மிரள வைப்பார். இவரது கேரக்டரில் ஒரு புத்திசாலித்தனம் தென்படும். இல்லாத ஒரு வாய்ப்பை உருவாக்கவும் தெரியும்.

அந்த வாய்ப்பு கைநழுவி போனா அதை இழுத்து தக்க வச்சிக்கவும் தெரியும். நல்லது மட்டும் பண்ண கடவுளால கூட முடியாது. நாம என்ன? என அசத்தலான டயலாக்கை இவர் பேசுகையில் கைதட்டல் காதைப் பிளக்கும்.

சத்ரியன்

Thilagan
Thilagan

1990ல் விஜயகாந்த்தின் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளுடன் வெளியானது சத்ரியன். இந்தப் படத்தில் தான் தமிழ்சினிமாவில் இருந்து தான் வித்தியாசமான வில்லன் தோன்ற ஆரம்பித்தான். அருமை நாயகம் என்ற கதாபாத்திரத்தில் திலகன் என்ற மலையாள நடிகர் வில்லனாக வந்து அசத்தினார். இவர் பேசும் தமிழில் மலையாள வாடையும் சேர்ந்து வந்து கேரக்டருக்கு மேலும் அழுத்தம் கொடுத்தது.

கவலைப்படாத. நான் இப்ப உன்ன இங்க பழிவாங்க வரல. எனக்கு நீ பழைய பன்னீர்செல்வமா வேணும்னு அமைதியாக கெத்து காட்டும் திலகன் தமிழ்சினிமாவில் 80ஸ் குட்டீஸை ரொம்பவே கவர்ந்தார். இந்தப்படத்தோட கிளைமாக்ஸ் சீன்ல உன்ன அடிச்சி இழுத்துட்டுப் போக வந்துருக்கேன்னு கேப்டன் சொல்வார். அதுக்கு செத்துப்போயிடுவன்னு திலகன் ஒரே வார்த்தையில் மிரட்டியிருப்பார்.

அதே போல 1979ல் வெளியான மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படத்தையும் சொல்லலாம். இதில் சுந்தரவடிவேலு என்ற கேரக்டரில் வரும் விஜயன் மாஸ் காட்டும் வில்லனாக நடித்து இருந்தார். அமைதியாக வசனம் பேசி அலறவிடுபவர்களில் இவரும் ஒருவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...