நெகட்டிவ் தலைப்பில் வெளியான சூப்பர்ஹிட் படங்கள் – ஒரு பார்வை

ஒருகாலத்தில் தமிழ்ப்படங்கள் என்றால் நேர்மறையான சிந்தனையைத் தூண்டும் தலைப்புகளுடன் வெளிவரும். படத்தின் பெயரே கதையையும் சொல்லி விடும். நீதிக்குத் தலைவணங்கு, தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தமையன், பாசம், பாசமலர், பணமா? பாசமா?, பந்தம் என்று இந்தப் படங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

காலப்போக்கில் படத்தில் என்ன தான் சொல்லப்பட்டுள்ளது என்று ரசிகனைத் தூண்டி திரையரங்கிற்கு வரவைப்பதற்காக படங்களின் டைட்டில்கள் நெகட்டிவ்வாக வெளிவந்தன. அதாவது எதிர்மறை சிந்தனையைத் தூண்டும் வகையில் அவை இருந்தன. பாதாள பைரவி, பட்டாக்கத்தி பைரவன், அந்நியன், திருடா திருடி, அருவா வேலு என்ற வகையில் இந்தத் தலைப்புகள் வெளிவந்தன. அவற்றில் இருந்து சில படங்களைப் பார்க்கலாம்.

திருட்டுப் பயலே

Thiruttu payale
Thiruttu payale

2006ல் சுசிகணேசன் இயக்கத்தில் வெளியான படம் திருட்டுப் பயலே. பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். ஜீவன், அப்பாஸ், சோனியா அகர்வால், மாளவிகா, விவேக் உள்பட பலர் நடித்துள்ளனர்.

பொல்லாதவன்

இந்த தலைப்பில் ரஜினி படமும், அவரது மருமகன் தனுஷ் படமும் வெளியாகியுள்ளன. 2007ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் பொல்லாதவன். அவருடன் டேனியல் பாலாஜி, கிஷோர், ரம்யா, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம் செம மாஸ் ஹிட்.

அசுரன்

Asuran
Asuran

2019ல் வெளியான படம். வெற்றிமாறன் இயக்கியுள்ளார். தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.

ராவணன்

Ravanan
Ravanan

2010ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம். விக்ரம், ஐஸ்வர்யாராய், கார்த்திக், பிரபு, பிரித்விராஜ், பிரியாமணி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பகாசுரன்

2023ல் மோகன் ஜி. இயக்கிய படம். செல்வராகவன், நட்டி, ராதாரவி, கூல் சுரேஷ், சரவண சுப்பையா உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சி எஸ். இசை அமைத்துள்ளார். படம் இயக்குனரின் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. சிவ சிவாயம் என்ற பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...