
பொழுதுபோக்கு
அடி தூள்!! பொன்னியின் செல்வம் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்;;
மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் வரலாற்றுப் படமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாராய் மற்றும் திரிஷா போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது நடைப்பெற்றுக்கொண்டு வருகிறது.
தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் தமிழில் வெளியிடுவதற்கான உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.
இதனிடையே இப்படத்தின் ட்ரைலர் அல்லது டீஸர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில் சோழப் பட்டத்து இளவரசரை வரவேற்கிறோம் என்றும் கடுமையான போர்வீரன், காட்டுப் புலி, ஆதித்த கரிகாலன் என்ற வாசகத்துடன் நடிகர் விக்ரமின் போஸ்ட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
Welcome the Chola Crown Prince! The Fierce Warrior. The Wild Tiger. Aditya Karikalan! #PS1 🗡@madrastalkies_ #ManiRatnam pic.twitter.com/UGXEuT21D0
— Lyca Productions (@LycaProductions) July 4, 2022
