சூர்யா நடித்து வரும் 39வது படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த டைட்டில் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது
சூர்யா நடித்து வரும் 39வது படத்தை தா.செ. ஞானவேல் என்பவர் இயக்கி வந்தார் என்பதும் இந்த படத்துக்கு சீன் ரோல்டன் என்பவர் இசையமைத்து வந்தார் என்பதும் இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வந்தது என்பதும் தெரிந்ததே
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்றும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது
இந்த படத்திற்கு ஜெய்பீம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து படக்குழுவினர்களுக்கு இயக்குனர் பா ரஞ்சித் உள்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூர்யா ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கும் இந்த படத்தில் பல புதுமுகங்கள் நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
சூர்யா நடித்துவரும் 40வது படம் இருக்கும் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் மற்றும் மூன்றாவது லுக் போஸ்டர்கள் வெளியாகி ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
Nice @Suriya_offl Anna Best wishes to entire team #JaiBhim #ஜெய்பீம் https://t.co/FrDNCbCXOm
— Studio Green (@StudioGreen2) July 23, 2021