கருப்பானாலும் ஜெயிச்சுக் காட்டுறேன்டா… தடைகளை உடைத்து நிரூபித்துக் காட்டிய சூப்பர்ஸ்டார்!

தமிழ்சினிமாவில் நல்ல வெள்ளை நிறத்தில் உள்ள நடிகர்களைத் தான் ஹீரோவாக போட்டு படம் எடுத்தார்கள். அதே போல் நாயகியும் நல்ல வெள்ளை நிறமாக இருக்க வேண்டும் என்பதையே பெரும்பாலான தயாரிப்பாளர்கள் விரும்பினர். இப்படிப்பட்ட நிறங்களைத் தான் மக்கள் ரசிப்பார்கள் என்ற ஒரு எழுதப்படாத விதி நீண்டகாலமாகவே தமிழ்சினிமாவில் இருந்து வந்தது. எல்லோரும் வெள்ளையைத் தேடினால் கறுப்பாக உள்ளவர்கள் எங்கே போவார்கள்?

கறுப்பாகவும், திறமையையும் உடைய பல கலைஞர்கள் இதனால் வெளி உலகிற்குத் தெரியாமலேயே போய் விட்டார்கள். திறமையிருந்தும் நடிக்க முடியவில்லையே என்று பலர் வருத்தப்பட்டு சினிமாவுக்குள் நுழைய முடியாமலேயே கிடைத்த வேறு பல வேலைகளுக்குச் சென்று விட்டனர். அப்படி தவறி ஒரு சில கலைஞர்கள் தான் சினிமா உலகில் கோலூச்சினர். அவர்களில் முத்தாய்ப்பாக முதலாவதாக வந்து இந்த விதியைத் தகர்த்தெறிந்தவர் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

Rajni
Rajni

அதுவரை சினிமா உலகில் கதாநாயகனுக்கு என்று பல லட்சணங்கள் இருந்தன. அழகான முகம். வெள்ளை நிறம். சிகை அலங்காரம், மேக் அப் என எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவார்கள். ஆனால் ரஜினிகாந்தோ கறுப்பு நிறம். சுமாரான அழகு. கோர முடி. வசன உச்சரிப்பும் தெளிவாக இருக்காது. நடனம் ஆடத் தெரியாது. இவ்வளவு இருந்தும் அவர்தன் ஸ்டைல் என்னும் தனித்திறமையால் முன்னேறி தமிழ்த்திரை உலகின் சூப்பர்ஸ்டார் ஆனார்.

பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகள் மட்டுமின்றி தாதா சாகேப் பால்கே விருதையும் பெற்றுள்ளார். இந்த வகையில் விஜயகாந்த், முரளி ஆகிய நடிகர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களும் தங்கள் தனித்திறமையால் மட்டுமே சினிமா உலகில் தங்களுக்கான இடத்தைப் பிடித்துக் கொண்டனர். இருந்தாலும் ரஜினியைத் தான் மக்கள் பெரிதும் ஊக்கப்படுத்தி வந்தனர். இன்று வரை அது தொடர்வது தான் பிரமிப்பான விஷயம்.

வெள்ளை நிற நடிகர்களை மட்டுமே கொண்டாடிய தமிழ் சினிமா உலகில் கறுப்பு நடிகர்களும் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் அடைந்தது சாதாரண புகழ் அல்ல. உச்சத்தையே தொட்டு விட்டார். அதனால் தான் பல பத்திரிகைகள் இவரை உச்சநடிகர் என்றே குறிப்பிடும். மக்கள் மனதை வெல்லும் வகையை அறிந்தவர்.

Rajni 2
Rajni 2

கருப்பு நிற நடிகர்கள் தொடர்ந்து சினிமா உலகிற்குள் நுழைய அச்சாரமிட்டவர் ரஜினிகாந்த் தான் என்றால் மிகையில்லை. இவ்வளவுக்கும் அவருக்கு எந்தவித சினிமா பின்னணியும் கிடையாது. ஆனாலும் சிகரத்தைத் தொட்டு விட்டார். சினிமாவிற்காக படிப்பு முடித்துள்ளார். அவ்வளவு தான். தற்போது இவருக்கு வயது 72.

ஆனால் இப்போதும் அதே வேகத்துடன் சூப்பர்ஸ்டாராக ஜெயிலர் படத்தில் இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து நடித்து வருகிறார் என்றால் ஆச்சரியம் தான். இவருக்குப் பிறகு யார் சூப்பர்ஸ்டார் என்று இளம் நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர். வானத்திலே ஒரே ஸ்டார்…! அது தான் சூரியன். பூமியிலே ஒரே ஸ்டார். அவர் தான் எங்கள் சூப்பர்ஸ்டார் என்ற அவரது ரசிகர்களின் பஞ்ச் தான் இதற்குப் பதில் சொல்லும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...