சிம்பு நடித்த ’மாநாடு’ படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த தகவலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்திற்கு மிகப் பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டது என்பதும் ஆனால் அந்த பிரச்சினைகளையும் சமாளித்து நேற்று முன்தினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் படக்குழுவினர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாநாடு திரைப்படத்தை பார்த்து தனது வாழ்த்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு தொலைபேசி மூலம் கூறியுள்ளார். இதனை அடுத்து சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் இது கூறியிருப்பதாவது:
இனிய நாளாக அமைந்துவிட்டது இந்நாள்
சூப்பர் ஸ்டாரின் அழைப்பும் பாராட்டும் இப்படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது
நல்லது தேடி பாராட்டும் இம்மனசே இன்னும் உங்களை உச்சத்தில் சிம்மாசனத்தில் உயர்த்தி வைத்திருக்கிறது.
மிகுந்த பலம் பெற்றோம். ஒட்டுமொத்த படக்குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மிக்க நன்றி சார்’ என தெரிவித்துள்ளார்