சூரரைப் போற்றிய சூப்பர் ஸ்டார்… தேசிய விருது வென்ற சூர்யாவுக்கு வாழ்த்து!

தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும் , சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிம்ப்ளிஃப்லி டெக்கான் நிறுவனர் ஜி கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2020ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தின் கதை அமைப்பும் மற்றும் சூர்யாவின் நடிப்பும் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுக்களை குவித்தது.

நேற்று அறிவிக்கப்பட்ட 68வது தேசிய விருதுகள் பட்டியலில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 5 விருதுகளை வாரிக்குவித்துள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளியும் பெற்றுள்ளனர். சிறந்த பின்னணி இசைக்கான விருதை இப்படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் பெற்றுள்ளார். சிறந்த திரைக்கதைக்கான விருது இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படத்திற்கான விருதும் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து விருதுகளை ‘சூரரைப் போற்று’ திரைப்படம் பெற்றுள்ளது.

இதனையடுத்து சோசியல் மீடியாவில் நடிகர் சூர்யாவுக்கும், சூரரைப் போற்று படக்குழுவினருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், “#NationalFilmAwards தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும் @Suriya_offl , சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்” என பதிவிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.