தலைவர் ரிட்டர்ன்ஸ்: ரஜினி சென்னை திரும்பும் தேதி!

a18a35bdf6468481bb4b8049494ba319

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பும் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார் என்பது தெரிந்தது. அவர் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் தங்கி இருந்து உடல் பரிசோதனை செய்து கொண்டார். ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் இன்று அமெரிக்காவிலிருந்து சென்னை கிளம்பி இருப்பதாகவும் நாளை அதிகாலை அவர் சென்னை வர இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது

ரஜினிகாந்த் சென்னை திரும்பியவுடன் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொள்வார் என்றும் அதன் பின் சில நாட்கள் கழித்து தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. ரஜினியின் அடுத்த படத்தை ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.