முத்துவேல் பாண்டியன் பராக்.. ரஜினியின் ‘ஜெயிலர்’ வீடியோ ரிலீஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி இந்த படத்தின் வீடியோ ஒன்று வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

jailer3இந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோவில் ரஜினிகாந்த் நீண்ட வாளை உருவி எடுக்கும் காட்சியுடன் கூடிய வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் அவர் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு, வசந்த ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews