சூப்பர் ஸ்பெஷாலிட்டி சேர்க்கை: 100% இடங்களைத் தாரை வார்த்தது அதிமுக.!! எடப்பாடிக்கு மா.சு பதிலடி!!
இன்று உச்சநீதிமன்றம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புக்கு தமிழக அரசு அறிவித்து இருந்த 50 சதவீத இட ஒதுக்கீடு தொடரும் என்று கூறியுள்ளது. தனியார் மருத்துவர்கள் மேல்முறையீடு செய்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவினை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதன்படி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் 100% இடங்களையும் ஒன்றிய அரசிடம் இருந்து 2017 ஆம் ஆண்டு தாரை வார்த்தது அதிமுக அரசு என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.
உயர் சிறப்பு படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீட்டை தாமே கொண்டு வந்ததாக பழனிசாமி கூறியதற்கு இவ்வாறு பதிலடி கொடுத்தார். 100 சதவீத இடத்தையும் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்து சமூக நீதியை குழிதோண்டிப் புதைத்து அதிமுக அரசு என்றும் சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார்.
அரசாணையை செயல்படுத்தாமல் அரசு மருத்துவர்களுக்கு அதிமுக அரசு துரோகம் இழைத்ததாக சுப்பிரமணியம் விமர்சனம் செய்தார். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி அரசாணைக்கு உயிர் கொடுத்தது திமுக அரசு என்றும் சுப்பிரமணியன் கூறினார்.
பறிக்கப்பட்ட உரிமையை மீட்டு முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி சாதனை படைத்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
