Connect with us

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியை ஏமாற்றிய விருமன் படக்குழு! கொஞ்சம் ஓவரா போறாங்க!

Super Singer Rajalakshmi Images

பொழுதுபோக்கு

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியை ஏமாற்றிய விருமன் படக்குழு! கொஞ்சம் ஓவரா போறாங்க!

இயக்குனர் சங்கர் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இவர் மருத்துவ படிப்பை படித்து விட்டு தற்போழுது ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவர் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படத்திலும் அவர் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

viru 2

விருமன் படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகிறது.இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு மதுரையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘மதுரை வீரன்’ என்ற பாடல் தற்போழுது டிரெண்டிடாகி உள்ளது.அப்பாடலை யுவனுடன் சேர்ந்து அதிதி ஷங்கர் பாடியுள்ளார். அறிமுகமான முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாக உள்ளார் அதிதி.

இந்நிலையில் தற்போழுது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, மதுரை வீரன்’ என்ற பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமி தான்.

maxresdefault 7

இயக்குனர் சங்கர் மகளா இது ! மாடல் ட்ரெஸ்ஸில் கலக்கலா இருக்காங்களே!

அவர் தான் இப்பாடலை முதலில் படத்திற்காக பாடியுள்ளார், ஆனால் திடீரென அவரின் குரலை நீக்கிவிட்டு அதிதி ஷங்கரை பாட வைத்தாக சமூக வலை தளங்களில் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி பெரிய ஏமாற்றமடைந்துள்ளார். ராஜலட்சுமியை விட அதிதி பாடினால் அது படத்தி புரொமோஷனாக அமையும் என படக்குழு எதிர்பார்த்திருக்கலாம்.

அதிதி பாடிய பாடல் சிறப்பாக இருந்தாலும் இந்த முறை சிறப்பானது அல்ல, இது சினிமாத்துறையில் வாரிசு நடிகர்களுக்கு கிடைக்கும் விருந்தாக அமைகிறது.இது தவறான செயல் என பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top