ஆர்.ஆர்.ஆர் படத்தின் சூப்பர் அறிவிப்பு: ரசிகர்கள் மகிழ்ச்சி

83772aa22fbdd7c5576976ca0c0a91f4

பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி தற்போது இயக்கி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது 

ஆர்.ஆர்.ஆர் படத்தின் சிங்கிள் பாடல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார் என்றும், பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக எஸ்எஸ் ராஜமவுலியின் படத்தில் ஒரு பாடலை அனிருத் பாடி உள்ள நிலையில் இந்த பாடலை மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இரண்டு முக்கிய நடிகர்கள் நடித்திருக்கும் இந்த படத்தில் பாலிவுட் பிரபலங்களான அஜய் தேவ்கான், ஆலியா பட் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைத்து உள்ளார் என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment