2 வது இடம்பிடிச்ச ஹைதராபாத்துக்கு இப்டி ஒரு லக் இருக்கா.. ஃபைனல்ஸ் போக கிடைத்த பொன்னான வாய்ப்பு..

நடப்பு ஐபிஎல் தொடரில் நடந்து முடிந்த 70 போட்டிகளுமே ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்ததுடன் மட்டுமில்லாமல் மிக விறுவிறுப்பாகவும் நடந்திருந்தது. இதில் பல போட்டிகளில் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்து இதய துடிப்பு எகிறும் அளவுக்கு போட்டிகளையும் கண்டு ரசித்து இருந்தார்கள்.

அதிலும் சமீபத்தில் ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் மோதி இருந்த போட்டியில் கடைசி ஓவர் வரைக்கும் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியாததால் பந்திற்கு பந்து ரசிகர்களின் பதட்டத்தையும் நாம் காண முடிந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது பிளே ஆப் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் அடுத்த சுற்றுக்கும் தயாராகி விட்டார்கள்.

இதில் குவாலிஃபயர் 1 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றது. இதனைத் தொடர்ந்து எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரண்டு போட்டிகளும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், எலிமினேட்டர் 2 மற்றும் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றன.

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ள நான்கு அணிகளுமே அதிக பலத்துடன் திகழ்வதால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்த முறை கோப்பையை கைப்பற்றும் அணிகள் யார் என்பதை நிச்சயமாக மிகத் துல்லியமாக சொல்லிவிட முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. பேட்டிங், பந்து வீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் நான்கு அணிகளும் கில்லி போன்று இருப்பதால் மீதமிருக்கும் நான்கு போட்டிகளுமே பட்டையை கிளப்பும் என்று தான் தெரிகிறது.

இதற்கிடையே இந்த சீசனில் ஃபைனல்ஸ் முன்னேறுவதற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கிடைத்துள்ள அற்புதமான வாய்ப்பை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். கடந்த 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் குவாலிஃபயர் போட்டிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் 2011 முதல் 2023 ஆம் ஆண்டு வரை புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்திருந்த அணிகள் நிச்சயம் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது.

அந்த வகையில் இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது இடம் பிடித்துள்ள நிலையில் அவர்கள் நிச்சயம் இறுதிப்போட்டியில் ஆடுவார்கள் என்றும் இந்த 13 ஐபிஎல் தொடரின் முடிவை பொருத்து தெரிவித்து வருகின்றனர். உதாரணத்திற்கு 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி இரண்டாவது இடம் பிடித்து இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது.

அதேபோல 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இரண்டாவது இடம் பிடித்திருந்த சிஎஸ்கே அணி தான் இறுதி போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...