ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க போலீசார் முடிவு

கொரோனா பரவல் காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நாளை மறுதினம் முதல் முழு நேர ஊரடங்கு நீண்ட நாட்களுக்கு பிறகு துவங்குகிறது.

ஊரடங்கு நேரத்தில் யாரும் வெளியே வரக்கூடாது என்பதே விதியாகும்.

சென்ற முறை இது போல ஊரடங்கு நடந்தபோது அருகில் உள்ள மைதானங்களில் கிரிக்கேட் விளையாடுவது  கேரம் விளையாடுவது போன்ற செயல்களில் பலர் ஈடுபட்டனர்.

அவர்கள் ட்ரோன் கேமரா வைத்து கண்காணிக்கப்பட்டனர் தற்போதும் அது போல் ட்ரோன் கேமரா வைத்து ஒவ்வொரு ஊரிலும் நகரங்கள் கண்காணிக்கப்பட இருக்கிறது.

அதனால் பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னையில்  10 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.சென்னை முழுவதும் 500 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment