தமிழக விவசாயியை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்த கூகுள் சுந்தர் பிச்சை: யார் அவர்?

தமிழகத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரை நேரில் அழைத்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வரும் செல்வ முரளி என்பவர் விவசாயம் சார்ந்த வார இதழ் மற்றும் ஆன்லைன் தளம் மற்றும் செயலியை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிராமப்புறங்களை சேர்ந்த மென்பொருள் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் 100 பேர்களுக்கு மென்பொருள் சார்ந்த பயிற்சி வழங்க கூகுள் முடிவு செய்தது.

இந்த நிலையில் அந்த நூறு பேரில் ஒருவராக செல்வமுரளியும் ஒருவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த வாரம் செல்வமுரளி டெல்லிக்கு அழைக்கப்பட்ட நிலையில் சுந்தர் பிச்சை அவரை சந்திக்க வேண்டுமென தெரிவித்ததை அடுத்து அவர் டெல்லி சென்றார்.

டெல்லியில்அவர் சுந்தர் பிச்சையை சந்தித்தபோது அவருக்கு நேரில் சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்தார். சுந்தர் பிச்சையை நேரில் பார்த்ததும் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்து இருந்த செல்வமுரளியை தட்டிக் கொடுத்து இயல்பு படுத்தினார்.

பின்னர் அவரது செல்வமுரளியின் செயலி குறித்து விளக்குமாறு சுந்தர் பிச்சை கேட்டுக் கொண்டதை அடுத்து செல்வமுரளி அந்த செயலி குறித்து விளக்கினார். இதனை அடுத்து இந்தியாவில் உள்ள பல மொழிகளிலும் இதே செயலியை விரிவாக்கம் செய்யுமாறு சுந்தர் பிச்சை அவருக்கு அறிவுரை கூறினார். இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.