
பொழுதுபோக்கு
சுந்தர். சி-க்கு பயத்தை காட்டிய திரைப்படம் எது தெரியுமா?
இயக்குனர் சுந்தர் சி கோலிவுட்டின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். காமெடி திரைப்படங்கள் எடுத்து கலக்குவது தான் சுந்தர் சி-யின் ஹைலைட். காமெடி படங்கள் என்றாலும் சரி ஹாரர் படங்கள் என்றாலும் சரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டருக்கு சென்று பொழுதுபோக்கும் அளவிற்கு படம் அமைந்திருக்கும்.
சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியது. இந்த படத்திற்கு காஃபி வித் காதல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி தற்போது ‘பட்டாம்பூச்சி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜெய் சைக்கோ வில்லனாக நடித்துள்ளார்.இந்த திரைப்படத்தை அவ்னி டெலி மீடியா தயாரிப்பில் நவ்நீத் இசையமைத்துள்ளார்.
சைக்கோ திரில்லர் வகை கதைக்களத்தை மையமாக கொண்டது, ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள பட்டாம்பூச்சி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தை பத்ரி நாராயணன் இயக்க,ஹனி ரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது,தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பட்டாம்பூச்சி திரைப்படம் வருகிற ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் அண்மையில் பேட்டி ஒன்றில் சுந்தர் சி “என் சினிமா வாழ்க்கையில் எனக்கு ரொம்ப பயத்தை காட்டிய படம் என்றால் அது அரண்மனை 2 தான் என கூறி உள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு வந்த சிக்கல்! அது என்ன தெரியுமா?
