Connect with us

சுந்தர் சி இயக்கத்தில் ‛காபி வித் காதல்’ ரிலீஸ் தேதி தெரியுமா ?

Copy of Feature Image 61 16565112503x2 1

பொழுதுபோக்கு

சுந்தர் சி இயக்கத்தில் ‛காபி வித் காதல்’ ரிலீஸ் தேதி தெரியுமா ?

இயக்குனர் சுந்தர் சி கோலிவுட்டின் பிரபல இயக்குனராக வளம் வருபவர், காமெடி திரைப்படங்கள் எடுத்து கலக்குவது தான் சுந்தர் சி-யின் ஹைலைட். சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.C- நடிகர் ஜெய் இணைந்து நடித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படம் திரையில் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது .ஜெய் மற்றும் ஜீவா ஆகியோர் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தனர்.

மீண்டும் இவர்கள் மூவரும் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை குஷ்புவின் அவ்னி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். மொத்தம் 8 பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

16545139623078

அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா ஷர்மா, திவ்யதர்ஷினி, சம்யுக்தா ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. படத்திற்கு காஃபி வித் காதல் என தலைப்பு வைத்துள்ளனர் .

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம்,அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் 8 பாடல்கள் உள்ள நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் தன் தந்தை இளையராஜா இசையமைத்த பாடல்களை தொடர்ந்து அவர் இசையமைக்கும் படங்களில் பயன்படுத்தி வருகிறார்.

coffee with kadhal 3

இந்த படத்தின் முதல் பாடலான ‛ரம் பம் பம்’ என்ற பாடலை வெளியிட்டு இதற்கான புரொமோ வீடியோ வெளியாகி உள்ளது. ஏற்கனவே இளையராஜா இசையமைத்த ‛மைக்கேல் மதன காமராசன்’ படத்தில் இடம் பெற்ற ‛ரம் பம் பம் ஆரம்பம்…’ பாடல் தான்.

திருச்சிற்றம்பலம் பட ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்- தாய் கெளவி வீடியோ பாடல் இதோ!

இப்போது ரம் பம் பம் ஆரம்பம்… என்ற பாடலையும் சுந்தர் சி படத்திற்காக அப்பா இளையராஜா அனுமதி உடன் பயன்படுத்தி உள்ளார் யுவன். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. தற்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி அக்.,7ல் படம் தியேட்டர்களில் வெளியாகிறது. இதனை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி தமிழகத்தில் வெளியிடுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top